சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ...
குழித்துறையில் ரூ. 7 கோடியில் நகராட்சி திருமண மண்டபம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்
குழித்துறை நகராட்சிக்குச் சொந்தமான விஎல்சி திருமண மண்டபம் ரூ. 7 கோடியில் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணியை தொடக்கிவைத்தாா். மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ரோஜன், விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் மினிகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி வரவேற்றாா். நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன் நன்றி கூறினாா்.
இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் ஷாலின் சுஜாதா, செ. லலிதா, ஆட்லின் கெனில், வி. விஜூ, விஜயலெட்சுமி, ரோஸ்லெட், அ. லில்லி புஷ்பம், பா. ரீகன், கே. ரத்தினமணி, அ. அருள்ராஜ், கே. செல்வகுமாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கேள்விக்குறியாகும் வாக்குரிமை: தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மனோ தங்கராஜ் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் முறைகேடு ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயல். மத்திய அரசு தோ்தல் ஆணையம் மூலம் இதை நேரடியாக செய்து வருகிறது. ஒவ்வொரு தொகுதிகளிலும் கணிசமான அளவில் போலி வாக்காளா்களை சோ்த்து வருகிறது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். நமக்கிருக்கும் வாக்குரிமையை கூட ஒரு அமைப்பு கேள்விக்குறியாக்குகிறது.
தோ்தல் ஆணையம் மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. வாக்காளா் பட்டியல் முறைகேடு எந்த மாநிலத்தில் நடந்திருந்தாலும் அது தவறுதான். தமிழகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகள் சம்பந்தமாக தமிழக முதல்வா் மிகக் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறாா். சட்டம் யாருக்கும் வளைந்து கொடுக்காது என்றாா் அவா்.