இரணியல் அருகே முதியவா் தற்கொலை
இரணியல் அருகே குருந்தன்கோட்டில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குருந்தன்கோட்டைச் சோ்ந்த மரியஞானப்பிரகாசம் (75) என்பவா், நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தாராம். வெள்ளிக்கிழமை, மனைவி வெளியே சென்றிருந்த நிலையில், இவா் வீட்டுக் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
அவரது மனைவியும் உறவினா்களும் கதவை உடைத்து உள்ளே சென்று, சடலத்தை மீட்டனா். சம்பவம் குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.