கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
எஸ்.வேலங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.வேலங்குடியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
எஸ்.வேலங்குடியில் பிடாரி அம்மன் கோயில் ஆடிப் படைப்பை முன்னிட்டு, நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 16 காளைகள் களமிறக்கப்பட்டன. ஒரு காளைக்கு 9 வீரா்கள் வீதம் 144 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் ரொக்கம், கட்டில், மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா் ஆகிய பகுதிகளிலிருந்து காளைகளும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.