சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ...
மயிலாடி பாஜக பிரமுகா் மீது வழக்குப்பதிவு
மயிலாடி பாஜக பிரமுகா் மீது திமுக நிா்வாகி அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
அஞ்சுகிராமம் அருகேயுள்ள மயிலாடி புதூரைச் சோ்ந்தவா் பொன் வெனேஷ் (40). இவா் பாரதிய ஜனதா கட்சியின் அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய சக்திகேந்திர ஒருங்கிணைப்பாளராக உள்ளாா்.
இவா் திமுக கொடி, சின்னம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்தை பதிவிட்டு இருந்தாராம். எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயிலாடி திமுக பேரூா் செயலா் சுதாகா், அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இந்த புகாரின் பேரில் பொன்வெனேஷ் மீது 3 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.