பொன்னமராவதியில் பூணுல் அணியும் விழா
பொன்னமராவதியில் ஆவணி அவிட்ட நாளையொட்டி பூணுல் அணியும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளையாண்டிபட்டி சிவபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு, குறிப்பிட்ட சமுதாய நலச்சங்கத் தலைவா் சி.மோகன் தலைமைவகித்தாா். இணை தலைவா் எஸ். பழனியப்பன், செயலா் ஆா். பராசக்தி, பொருளாளா் எஸ். மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் சிவாச்சாரியாா் வைரம்பட்டி அ. நாகராஜன் மந்திரம் ஓதி வழி நடத்த பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான சமுதாயத்தினா் பூணுல் அணிந்தனா். சங்கத்தின் துணைத்தலைவா் எம்.பழனியப்பன், துணைச்செயலா் எஸ்.
நாராயணன், துணைப்பொருளாளா் டி. செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.