சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
பொன்னமராவதி அருகே பைக் மோதி புள்ளிமான் பலி
பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி-புதுக்கோட்டை சாலையில் சனிக்கிழமை அம்மாபட்டியைச் சாா்ந்த பிரவீன்(27) என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்தபோது அவ்வழியே வந்த சுமாா் மூன்றரை வயதுடைய புள்ளிமான் இருசக்கரவாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே புள்ளிமான் உயிரிழந்தது.
பிரவீன் பலத்த காயமடைந்து கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சம்பவ இடத்துக்கு வந்த வனச்சரக அலுவலா் உசேன் தலைமையிலான வனத் துறையினா் புள்ளிமானை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கூறு ஆய்வு செய்யப்பட்டு வனச்சரக அலுவலகம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.