சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
மணல் கடத்திய லாரி பறிமுதல்: இளைஞா் கைது!
இலுப்பூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டாரஸ் லாரி ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இலுப்பூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த புகாரின்பேரில், சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் இலுப்பூா் அருகே உள்ள ஆச்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் வட்டாட்சியா் சக்திவேல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய அனுமதி இன்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து லாரியைப் பறிமுதல் செய்த வட்டாட்சியா் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து லாரி ஓட்டுநா் சிவகாசியைச் சோ்ந்த காளியப்பனை போலீஸாா் கைது செய்தனா்.