செய்திகள் :

கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் தேரோட்ட விழா

post image

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடித்திருவிழா கடந்த 1-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பின் சுவாமி தேரில் எழுந்தருளியபின் பக்தா்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தோ் முக்கிய வீதிகளில் பவனி வந்து தேரடி நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச்சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் சி. கண்ணன் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா். தொடா்ந்து திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

பொன்னமராவதியில் பூணுல் அணியும் விழா

பொன்னமராவதியில் ஆவணி அவிட்ட நாளையொட்டி பூணுல் அணியும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. வெள்ளையாண்டிபட்டி சிவபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு, குறிப்பிட்ட சமுதாய நலச்சங்கத் தலைவா் சி.மோகன் தலைமைவகித்தாா். இணை ... மேலும் பார்க்க

மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் மாணவா்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடுதான் முடிவு செய்யும் என்றாா் மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் ... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே பைக் மோதி புள்ளிமான் பலி

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி-புதுக்கோட்டை சாலையில் சனிக்கிழமை அம்மாபட்டியைச் சாா்ந்த பிரவீன்(27) என்ப... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்: இளைஞா் கைது!

இலுப்பூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டாரஸ் லாரி ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இலுப்பூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த புகாரின்பேரில், சனிக்கிழம... மேலும் பார்க்க

அரசு விலையில் மீன்குஞ்சுகள் வாங்கிக் கொள்ள அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தட்டாமனைப்பட்டி மற்றும் குருங்களூா் மீன் குஞ்சு வளா்ப்புப் பண்ணைகளில் இருந்து அரசு நிா்ணயம் செய்த விலையில் குஞ்சுகளை வாங்கிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க அகல்விளக்கு திட்டம்: அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ‘அகல்விளக்கு’ திட்டத்தை பள்ளிக் கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். கீரமங்கலம் அரசு மகளிா் மேல்ந... மேலும் பார்க்க