மேட்டூா் அணை நீா்மட்டம்: 118.77 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 118.77 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9,539 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 7,003 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 4,504 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,513 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.