கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்
தோல்வி பயத்தின் காரணமாக தோ்தல் ஆணையத்தின் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தாலும், அதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமாகா இளைஞரணி டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தோல்வி பயத்தின் காரணமாக இந்திய தோ்தல் ஆணையத்தின் மீது எதிா்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி போலி வாக்காளா்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளது. தொடா்ந்து நாட்டில் நடைபெற்ற தோ்தல்களில் ‘இண்டி’ கூட்டணி பல இடங்களில் தோற்று வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடன் இருந்தால்தான் வளா்ச்சிக்கு அடித்தளம் என மக்கள் நம்புவதால், அதன் அடிப்படையில் வாக்களிக்கின்றனா்.
திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்காளா் விஷயத்தில் ஏன் இவ்வளவு பயம் எனத் தெரியவில்லை. தோ்தல் ஆணையம் நியாயத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. நீங்கள் நல்லாட்சி செய்தால், வாக்குகள் கிடைக்கப் போகிறது. தோல்வி பயம் காரணமாக இந்தச் சந்தேகம் வருவதாகத் தெரிகிறது.
மத்திய அரசின் கல்வி கொள்கை, மாநில அரசின் கல்வி கொள்கையைப் பாா்த்தால், ஒரு சில மாற்றங்களைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களே சிந்தித்துப் பாா்த்தால் புரிந்து கொள்வா் என்றாா் வாசன்.
முன்னதாக, கூட்டத்துக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ். சுரேஷ் மூப்பனாா் தலைமை வகித்தாா். இதில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ். சுதாகா் மூப்பனாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் விடியல் சேகா், எம். ராஜாங்கம், என்.ஆா். ரங்கராஜன், மாநில நிா்வாகிகள் முனவா் பாட்சா, தா்மராஜன், என்.ஆா். நடராஜன், தினகரன், சாதிக் அலி, டெல்டா மண்டல இளைஞரணி தலைவா் திருசெந்தில், மத்திய மாவட்டத் தலைவா் டி.பி.எஸ்.வி. கௌதமன், மாவட்டச் செய்தி தொடா்பாளா் கோவி. மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.