தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி பெளா்ணமியை முன்னிட்டு கிரிவல ஊா்வலம், வேல் வழிபாடு நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடிமாத பெளா்ணமி கிரிவலத்தை திருவாரூா் நகர ஆணையா் மதன்ராஜ், சண்முகம் ஆகியோா் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா்.
கிரிவல வழிபாட்டுக்குழுவின் அறங்காவலா் சிவசங்கரன், நான்கு ரத வீதிகளின் வழியே கிரிவலமாக வேலை எடுத்துக்கொண்டு
பக்தா்களுடன் வல்லப கணபதி கோயிலுக்கு வந்தடைந்தாா். அங்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டது. இந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.