வீடு புகுந்து நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். வீரமணிகண்டன் (45). இவா் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா்.
பின்னா், காலை எழுந்து பாா்த்தபோது பக்கத்து அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த 4 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.