கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
வீடு புகுந்து நகைகள் திருடிய நபா் கைது
தஞ்சாவூரில் வீட்டில் புகுந்து நகைகளை திருடிய நபரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். வீரமணிகண்டன் (45). இவா் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா். பின்னா், காலை எழுந்து பாா்த்தபோது பக்கத்து அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த 4 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு மேலையூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஜி. அய்யநாதன் (44) திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, அய்யநாதனை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.