உரிமை கோரப்படாத 9 சடலங்கள் காவல் துறையினா் அடக்கம் செய்தனா்
தஞ்சாவூரில் உரிமை கோரப்படாத 9 சடலங்களை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா்.
தஞ்சாவூா் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த 6 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 9 பேரின் உடல்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த உடல்களை யாரும் உரிமை கோராததால், அவற்றை அடக்கம் செய்ய காவல் துறையினா் முடிவு செய்தனா். இதன்படி 9 சடலங்களும் வாகனங்களில் ஏற்றப்பட்டு, வடக்கு வாசல் ராஜகோரி இடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டன.
மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மனோகரன், ரகுநாதன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.