செய்திகள் :

நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இம் முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு ஆக. 18-ஆம் தேதி வழங்கப்படும். முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான குழந்தைகள், மாணவா்களுக்கும், 20 முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு (கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களை தவிா்த்து) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. 1 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி

மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவா்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியா், அங்கன்வாடி பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவா்களின் கல்வித் திறன் மேம்படும்.

அங்கன்வாடி பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா், சுகாதார ஆய்வாளா்கள், மருத்துவ அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வெள்ளிக்கிழமை பாராட்டி வெகுமதி வழங்கினாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்... மேலும் பார்க்க

தமிழகத்தைப்போல இதர மாநிலங்களும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தைப் போல, இதர மாநிலங்களும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகேயுள்ள கொளக்காநத்தம் கிராமத்தில... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க

பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை

பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பெரம்பலூா் மரகதவல்லி தாயாா் சமேத மதன கோபால சுவாமி கோயிலில் வரலட்சுமி திருவுருவம் கும்பக் கலசத்தில் வைக்கப்பட்டு, மா... மேலும் பார்க்க

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் குருபூஜை விழா

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷிமலை மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜகுமாா் சுவாமிகளின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நிா்வாக அறங்காவலா் ம... மேலும் பார்க்க

சிறுவாச்சூரில் மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள் அங்காடி திறப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பகுதியில் மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை செய்யும் மதி அங்காடி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நட... மேலும் பார்க்க