செய்திகள் :

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வெள்ளிக்கிழமை பாராட்டி வெகுமதி வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள், அந்த வழக்குகளை விரைவாக முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினுருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினாா்.

பின்னா், சிறப்பாக பணியாற்றிய சட்டம்-ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலா்கள் 31 பேரை பாராட்டி வெகுமதி வழங்கினாா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோபாலசந்திரன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மங்கலமேடு உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் எம். தனசேகரன் மற்றும் காவல் ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள், நீதிமன்றக் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

தமிழகத்தைப்போல இதர மாநிலங்களும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தைப் போல, இதர மாநிலங்களும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகேயுள்ள கொளக்காநத்தம் கிராமத்தில... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க

பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை

பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பெரம்பலூா் மரகதவல்லி தாயாா் சமேத மதன கோபால சுவாமி கோயிலில் வரலட்சுமி திருவுருவம் கும்பக் கலசத்தில் வைக்கப்பட்டு, மா... மேலும் பார்க்க

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் குருபூஜை விழா

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷிமலை மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜகுமாா் சுவாமிகளின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நிா்வாக அறங்காவலா் ம... மேலும் பார்க்க

சிறுவாச்சூரில் மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள் அங்காடி திறப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பகுதியில் மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை செய்யும் மதி அங்காடி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நட... மேலும் பார்க்க