காஸா: பத்திரிகையாளர்கள் பலி; கேள்விக்குறியான மக்களின் உயிர்! குண்டுவீச்சு தாக்கு...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.87.66 ஆக நிறைவு!
மும்பை: இறக்குமதியாளர்களுக்கு தொடர்ச்சியாக டாலர் தேவையும், இதனை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சியாலும், இந்திய ரூபாய் மதிப்பு இன்று 8 காசுகள் சரிந்து ரூ.87.66 ஆக நிறைவடைந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வும், இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரிப்பும், அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.56 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.87.48 முதல் ரூ.87.66 என்ற வரம்பில் வர்த்தகமானது. இது முந்தைய முடிவை விட 8 காசுகள் சரிந்து ரூ.87.66ஆக நிறைவடைந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அதன் இழப்புகளைச் சரிசெய்து, டாலருக்கு நிகராக ரூ.87.58 ஆக முடிவு.
இதையும் படிக்க: மீண்டும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 746 புள்ளிகளுடனும், நிஃப்டி 221 புள்ளிகளுக்கு மேல் நிறைவு!