செய்திகள் :

காஸா: பத்திரிகையாளர்கள் பலி; கேள்விக்குறியான மக்களின் உயிர்! குண்டுவீச்சு தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

post image

காஸாவில் குண்டுவீச்சு தாக்குதல்களை இஸ்ரேல் ம்ீண்டும் முனைப்புடன் நடத்தியுள்ளதால் ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

காஸாவில் தாக்குதல் திட்டத்தை விரைவுபடுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை(ஆக. 10) அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, காஸா சிட்டியில் (இப்பகுதியே ஹமாஸ் படையின் பயங்கரவாத தாக்குதல்களின் தலைமையிடமாக திகழ்வதாக நெதன்யாகு குறிப்பிடுகிறார்) இஸ்ரேல் ராணுவம் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் மக்கள் அச்சப்படுகிறார்கள். அங்கு சுமார் 1 மில்லியன் மக்கள் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், மக்களின் உயிருக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

காஸா சிட்டியில் தளர்வடைந்த தாக்குதல்கள் மீண்டும் இஸ்ரேல் ராணுவத்தால் முனைப்புடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஸா முனையின் வடக்கு பகுதியில் காஸா சிட்டியில் சாப்ரா, சேய்டோன், ஷெஜாயா ஆகிய மூன்று கிழக்கத்திய புறநகர்ப் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவில் குண்டு மழை பொழிந்தன. இதனால் அப்பகுதிகளில் பல குடும்பங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி மேற்கு எல்லையை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் வீடுகளும் கட்டடங்களும் தகர்ந்தன; சாலைகளிலும் குண்டுமழைப் பொழிந்ததை நேரில் பார்த்ததாக அங்குள்ள மக்கள் விவரிக்கின்றனர்.

இஸ்ரேலின் இந்த குண்டுவீச்சு தாக்குதல்களில் முக்கியமாக 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச சமூகத்தில் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கும்போது, தங்களது படைகள் ஹமாஸ் படைக்குழுவின் வசிப்பிடங்களைக் குறிவைத்தே தாக்குதல்களை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி!

Palestinians reported the heaviest bombardments in weeks on Monday (August 11, 2025) in areas east of Gaza City

அல்-ஜசீரா செய்தியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி!

காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அல்-ஜசீரா செய்தியாளர்களைகுறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாததிலிருந... மேலும் பார்க்க

இந்த நாடு, 2025க்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும்! எலான் மஸ்க் எச்சரிக்கை

ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை அண்மை ஆண்டுகளில் வெகுவாக சரிந்து வரும் நிலையில், 2025 இறுதிக்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலா... மேலும் பார்க்க

இந்த வார்த்தைகள் உங்களை அடைந்தால்.. அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு

காஸா மீது, இஸ்ரேல் நடத்திய மிகக் கோரமான தாக்குதலில், செய்தியாளர்களின் முகாமில் இருந்த அனஸ் அல்-ஷரீஃப் உள்பட 5 அல் ஜஸீரா செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டனர்.28 வயதே ஆன அல் ஜஸீரா செய்தியாளர் அ... மேலும் பார்க்க

புதின் - டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளும... மேலும் பார்க்க

ஆப்கனில் ஐ.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்: தலிபான் அரசு விசாரணை!

ஆப்கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல... மேலும் பார்க்க