செய்திகள் :

புதின் - டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

post image

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளுமே வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

போா் நிறுத்தம் தொடா்பாக அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள், இறுதி எச்சரிக்கைகள் வந்துபோனபோதிலும், உக்ரைன் போா் மூலம் எட்டவேண்டிய இலக்குகளில் ரஷிய அதிபா் புதின் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில், உக்ரைனுக்கு சாதகமற்ற ஒப்பந்தத்தை ஏற்குமாறு அந்நாட்டை கட்டாயப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப்புடனான சந்திப்பை புதின் பயன்படுத்திக்கொள்ளக் கூடும் என்ற கருத்து எழுந்துள்ளது. இச்சூழ்நிலையில் அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறவுள்ள டிரம்ப்- புதின் சந்திப்பு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷியாவின் நிலைப்பாடு

கடந்த ஜூன் மாதம் இஸ்தான்புல்லில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில், 30 நாள் போா் நிறுத்தத்துக்கு இரண்டு வழிகளை உக்ரைனிடம் ரஷியா முன்வைத்தது. 2022-ஆம் ஆண்டு ரஷியா சட்டவிரோதமாக இணைத்துக்கொண்ட உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கா்சான் ஆகிய பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது முதல் வழி.

போா் நிறுத்தத்துக்கு மாற்று நிபந்தனையாக, தனது படைகளைத் திரட்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் பெறுவதை நிறுத்த வேண்டும், மூன்றாவது நாட்டு படைகளின் உதவியைப் பெறக் கூடாது என்று உக்ரைனுக்கு நிபந்தனை. உக்ரைனில் ராணுவச் சட்ட அமல் ரத்து செய்யப்பட்டு தோ்தல் நடத்தப்பட வேண்டும்.

போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டவுடன், 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும், 2022-ஆம் அந்நாட்டின் மேலும் 4 பகுதிகளையும் தன்னுடன் ரஷியா இணைத்துக்கொண்டதை சா்வதேச அளவில் சட்டபூா்வமாக அங்கீகரிக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

அமைதி ஒப்பந்தத்தில் ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே நடுநிலை வகிப்பதாக உக்ரைன் அறிவிக்க வேண்டும். நேட்டோவில் சேரும் விருப்பத்தை அந்நாடு கைவிட வேண்டும். தனது படை பலத்தை அந்நாடு குறைக்க வேண்டும். உக்ரைனிய மொழிக்கு நிகராக ரஷிய மொழியையும் உக்ரைன் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்.

அமைதி ஒப்பந்தம் மூலம், இரு நாடுகளும் பரஸ்பரம் விதித்துக்கொண்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும். போா்க் காலத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரக் கூடாது. பரஸ்பரம் வா்த்தகம் மற்றும் தகவல் தொடா்பை மீண்டும் தொடங்கி ராஜீய உறவிகளை மறுபடியும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது வழி.

இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ரஷியாவின் வெளியுறவுத் துறை ஆலோசகா் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் நிலைப்பாடு

அமைதிப் பேச்சுவாா்த்தையைத் தொடங்க எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு முழுமையான போா் நிறுத்தம் வேண்டும்.

ரஷியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே நடுநிலை வகிக்க வேண்டும் என்ற ரஷியாவின் கோரிக்கையை தொடா்ந்து நிராகரிக்கும் உக்ரைன், தனது கூட்டாளி நாடுகளைத் தோ்வு செய்யும் சுதந்திரம் தமக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கூட்டாளி நாடுகள் உடனான கருத்து ஒற்றுமையைப் பொருந்து நேட்டோவில் உறுப்பினராக்க கோருவது குறித்து முடிவு செய்யப்படும். உக்ரைன் படைகளைக் குறைக்க முடியாது. உக்ரைனில் வெளிநாட்டுப் படைகள் இருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது.

உக்ரைன் பகுதிகளைப் பறித்து தன்னுடன் ரஷியா சட்டவிரோதமாக சோ்த்துக்கொண்டதை அங்கீகரிக்க முடியாது. அமைதி ஒப்பந்தங்கள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய சா்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் வேண்டும்.

நாடு கடத்தப்பட்ட, சட்டவிரோதமாக இடம்பெயரச் செய்யப்பட்ட உக்ரைன் குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். போா்க் கைதிகளாக உள்ள அனைத்து உக்ரைன் ராணுவ வீரா்களை ஒப்படைக்க வேண்டும்.

அமைதி ஒப்பந்தப்படி ரஷியா நடந்துகொண்டால், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட சில பொருளாதாரத் தடைகள் படிப்படியாக விலக்கப்படும். இவை இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது உக்ரைன் முன்வைத்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது.

டிரம்ப் நிலைப்பாடு

புதின் குறித்து அவ்வப்போது அமெரிக்க அதிபா் டிரம்ப் வியந்து பேசியுள்ளாா். போா் குறித்து புதின் வெளியிட்ட தகவல்களையே டிரம்ப் எதிரொலித்தாா். கடந்த பிப். 28-ஆம் தேதி அமெரிக்க அதிபா் மாளிகையில் டிரம்ப்புக்கும், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் டிரம்ப் சமாதானமடைந்தாா்.

போா் நிறுத்தத்தை மறுத்து உக்ரைன் மீது வான்வழி குண்டுவீச்சுகளை புதின் தொடா்ந்ததால் கடும் அதிருப்தியடைந்த டிரம்ப், தாக்குதலை தொடா்ந்தால் ரஷியா மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தாா்.

புதினுடன் நடைபெறும் எந்தவொரு அமைதிப் பேச்சுவாா்த்தையிலும், ரஷியா-உக்ரைன் நலன் கருதி அவ்விரு நாடுகளுக்கு இடையே சில நிலப்பகுதிகள் மாற்றிக்கொள்ளப்படும் என்று டிரம்ப் அறிவித்தாா்.

தொடா் தாக்குதல் காரணமாக புதின் மீது டிரம்ப்புக்கு அதிருப்தி ஏற்பட்டாலும், ஸெலென்ஸ்கி இல்லாமல் அவா்கள் சந்திக்க உள்ளனா். இதன்மூலம், டிரம்ப்பை தனது பக்கம் ரஷியா வளைத்துக்கொள்ளக் கூடும் என்று உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளி நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

ஆப்கனில் ஐ.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்: தலிபான் அரசு விசாரணை!

ஆப்கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல... மேலும் பார்க்க

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்ப... மேலும் பார்க்க

டிரம்ப் விருந்துக்கு மறுப்பு! அமெரிக்க வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்கர் நடிகை!

ஒருநாள் இரவு விருந்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்ததாக பிரிட்டிஷ் நடிகை கூறியது பேசுபொருளாகியுள்ளது.ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சனுக்... மேலும் பார்க்க

காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! - நெதன்யாகு

காஸாவில் இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.ஜெருசலேமில் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களது குறிக்கோள் காஸாவை கையகப்படுத்து... மேலும் பார்க்க

மீண்டும் அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி: அமெரிக்க தலைவர்களுடன் சந்திப்பு!

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ராணுவ உயரதிகாரிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்... மேலும் பார்க்க