செய்திகள் :

கர்நாடகத்தில் ஜிஎஸ்டி முறைகேடு: வரி ஏய்ப்பு 5 மடங்கு அதிகரிப்பு!

post image

கர்நாடகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) ஏய்ப்பு செய்யப்படுவது 5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் 2024-25 நிதியாண்டில், ரூ. 39,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக மொத்தம் 1,254 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

2024-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ஆம் நிதியாண்டில் வரி ஏய்ப்பு 5 மடங்குக்கும் மேல் அதிகம். 2023-24 நிதியாண்டில் ரூ. 7,202 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது. மொத்தம் 925 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2022-23 நிதியாண்டில் ரூ. 25,839 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மக்களவையில் எழுப்பப்பட்டதொரு கேள்விக்கு அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Central GST officers in Karnataka detected tax evasion of ₹39,577 crore in 2024-25 fiscal year

மக்களவையில் அமளிக்கிடையே 3 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா!

புதிய வருமான வரி மசோதா 2025 மக்களவையில் இன்று(ஆக. 11) நிறைவேற்றப்பட்டது.கடந்த 1961-இல் இயற்றிய வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட ’வருமான வரி மசோதா-2025’ கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையி... மேலும் பார்க்க

டிரம்ப் வரி உயர்வு... உக்ரைன் அதிபருடன் பேசிய மோடி!

உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று (ஆக. 11) பேசினார். ரஷியாவுடன் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து மோடி கேட்டறிந்தா... மேலும் பார்க்க

இந்தியாவில் பருவமழை இயல்பை ஒட்டியே பதிவு: ஆனால்..!

இந்தியாவில் நடப்பு பருவகாலத்தில் பருவமழைப்பொழிவு இதுவரை இயல்பான அளவையொட்டியே பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் விவசாயத்துக்கும் உள்நாட்டு உற்பத்திக்க... மேலும் பார்க்க

பிரமாணப் பத்திரம் கொடுக்க அது என் தரவுகள் அல்ல, உங்களுடையது! ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க

தூக்கத்தில் கொன்றுவிடு! ஆபத்தான ரகசியங்களை கடத்தும் செய்யறிவு! மனித குலத்துக்கு அழிவா?

செய்யறிவு பாதுகாப்பு அம்சங்கள் 2025 என்ற தலைப்புல் நடத்தப்பட்ட ஆய்வில், செய்யறிவு மாடல்கள், யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாடலுக்கு ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!

வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல... மேலும் பார்க்க