இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17 வரை #VikatanPhotoCards
மக்களவையில் அமளிக்கிடையே 3 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா!
புதிய வருமான வரி மசோதா 2025 மக்களவையில் இன்று(ஆக. 11) நிறைவேற்றப்பட்டது.
கடந்த 1961-இல் இயற்றிய வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட ’வருமான வரி மசோதா-2025’ கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை(ஆக. 8) திரும்பப் பெற்றாா்.
முன்னதாக, மக்களவை தற்காலிக குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப்பட்ட நிலையில், 31 எம்.பி.க்கள் அடங்கிய தோ்வுக் குழு, மசோதா தொடா்பாக சில பரிந்துரைகளை வழங்கியது. இதனைக் கருத்தில் கொண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றாா்.
இதனைத்தொடர்ந்து, அந்த மசோதாவின் புதிய பதிப்பு ஆக.11-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் தோ்வுக் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் சோ்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கிடையில் இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெறும் 3 நிமிடங்களில் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக, மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.