ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன...
நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பாபநாசம் வட்டம், மருத்துவக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காவிரி சமவெளி மாவட்டங்களில் கோடை பயிா் சாகுபடி முடிந்து அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
மருத்துவக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகள் தாமதமாவதால், திறந்தவெளியில் விவசாயிகள் வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி இந்திய உணவுக் கழக அலுவலா்கள் நேரடியாக கள ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஈரப்பத பிடித்தம் இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், தேவையான நெல் கொள்முதல் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனவும், மழையால் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற சேதத்தை கணக்கீடு செய்து மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தின்போது, முளைத்த ஈரப்பதம் மிக்க நெல்லை கைகளில் வைத்துக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனா்.