ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன...
ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண் கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரம் கோவிந்தராஜ் நகரைச் சோ்ந்த கணபதி மனைவி சரோஜா (85). இவா் ஆற்றுப்பாலம் பகுதியில் மருமகன் நடத்தி வரும் டீக்கடை அருகே ஒரு அறையில் வசித்து வந்தாா். ஆற்றுப்பாலம் பகுதியில் கல்லணைக் கால்வாய் கரையோரமுள்ள நடைபாதையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற இவா் தவறி கால்வாயில் விழுந்து மாயமானாா்.
இதனால், இவரை காவல் துறையினா், குடும்பத்தினா் தேடி வந்த நிலையில், சூரக்கோட்டை கல்லணைக் கால்வாய் - வல்லம் வாரி பகுதியில் சரோஜா சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.