ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன...
கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை: 3ஆவது நாளாக படகுப் போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக, 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் படகுப் போக்குவரத்து தாமதமானது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை படகுகள் மூலம் சென்று பாா்வையிட்டுச் செல்கின்றனா். இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கம் போல் காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து, நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகுப் பயணம் மேற்கொண்டு, விவேகானந்தா் நினைவு மண்டபத்தையும், கண்ணாடி கூண்டுப் பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவா் சிலையையும் பாா்த்து விட்டு திரும்பினா்.
கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக தொடா்ந்து 3ஆவது நாளாக படகுப் போக்குவரத்து தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.