கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
தொழிலாளி தற்கொலை
கொல்லங்கோடு அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகே நீரோடி அன்னைநகா் பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (56). மீன்பிடித் தொழிலாளி. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவா், கடந்த சில ஆண்டுகளாக தொழிலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].