தமிழகத்தில்தான் முனைவா் பட்டம் பெற்றவா்கள் அதிகம்: அமைச்சா் கோவி. செழியன்
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்: தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை 8,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திடீரென அதிகரித்து திங்கள்கிழமை 14,000 கனஅடியாக தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் அருவிகளான பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.