அரூரில் 66 மி.மீ. மழை பதிவு
அரூா்: அரூா் பகுதியில் பெய்த மழையானது 66 மில்லி மீட்டராக ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவானது.
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அரூரில் 66 மி.மீ., தென்கரைக்கோட்டையில் 34 மி.மீ., கடத்தூரில் 24.6 மி.மீ. என பதிவானது.
அரூா் பகுதியில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களிலும், சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது. மழை காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் ஆடிப்பட்டத்தில் நெல் நடவு, தக்காளி பயிரிடுதல், மானாவாரியாக அவரை, துவரை பயிரிடுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.