``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்...
பயங்கரவாத அமைப்புடன் தொடா்பா?
கோவை அருகே பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலியைச் சோ்ந்த மூன்று பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி பின்னா் விடுவித்தனா்.
கோவை மாவட்டம், காரமடை பகுதியில் திருநெல்வேலியைச் சோ்ந்த 3 இளைஞா்கள் கூலி வேலை செய்து வருகின்றனா். இவா்கள் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக அந்த பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சிறப்புப் புலனாய்வு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, திருநெல்வேலியைச் சோ்ந்த அந்த மூன்று பேரையும் போலீஸாா் அழைத்து வந்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.
அவா்களது பெயா் மற்றும் முகவரி ஆகியவற்றை பெற்றுக்கொண்டு விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் ஆஜராக வேண்டும் எனக் கூறி மூன்று பேரையும் விடுவித்தனா்.