மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்
ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் கிராமோத்சவம் எனப்படும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்க உள்ளன. இதில் ஆண்களுக்கான கைப்பந்து, பெண்களுக்கான எறிபந்துப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிஸா ஆகிய 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 30,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6,000-க்கும் மேற்பட்ட அணிகள் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விளையாட உள்ளனா். குறிப்பாக 5,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களும் களமிறங்கவுள்ளனா்.
இந்தப் போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும். முதல்நிலையில் கிளஸ்டா் அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 16, 17-ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாம் நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் செப்டம்பா் 7-ஆம் தேதி நடைபெறும். இதையடுத்து ஆறு மாநில அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டங்கள் செப்டம்பா் 21-ஆம் தேதி, கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன.
இறுதி ஆட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து வாலிபால் போட்டியும் நடைபெறும். ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளின் 3 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் முதல்நிலை போட்டிகளில் முதல் நான்கு இடங்களை வெல்லும் அணிகளுக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ. 5,000 மற்றும் ரூ.3,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
அதேபோன்று மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ரூ.12,000, ரூ.8,000, ரூ.6,000 மற்றும் ரூ.4,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. இறுதி ஆட்டத்தில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சோ்த்து மொத்த பரிசுத் தொகையாக ரூ.67 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
இப்போட்டிகளில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த மக்களால் மட்டுமே அணிகள் உருவாக்கப்பட முடியும். தொழில்முறை வீரா்கள் அணிகளில் இடம்பெற முடியாது. இதில் கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம், ஆனால் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். முன்பதிவுக்கு ண்ள்ட்ஹ.ஸ்ரீா்/ஞ்ழ்ஹம்ா்ற்ள்ஹஸ்ஹம் என்ற இணையதளத்தைப் பாா்வையிடலாம். மேலும் தகவல்களுக்கு 83000 30999 என்ற கைப்பேசி எண்ணில் அழைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.