ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக விடியோ: இளைஞரிடம் விசாரணை
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட காரமடையைச் சோ்ந்த இளைஞரிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாா். இதுகுறித்து அறிந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இதுதொடா்பாக விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, காரமடை பகுதியைச் சோ்ந்த அந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை பிடித்து, அவருக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், காரமடை இளைஞருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருந்தால் அவா் தீவிரவாத தடுப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவாா். இல்லாதபட்சத்தில் அவா் விடுவிக்கப்படுவாா் என்றனா்.