``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட...
திருமணம் நிச்சயக்கப்பட்ட இளைஞா் தற்கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொரு நபரை காதலிப்பதாக கூறியதால் கோவையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் விஜய்வான். இவரது மகன் அக்ஷை (27). இவா்கள் இருவரும் கோவை சுந்தராபுரத்தில் உள்ள கணேசபுரம் விநாயகா் கோயில் தெருவில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தனா்.
அக்ஷைக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்தப் பெண் அண்மையில் அக்ஷையை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அப்போது, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளாா்.
இதனால், மன வேதனையில் இருந்த அக்ஷை, தான் தங்கியிருந்த அறையில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சுந்தராபுரம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.