செய்திகள் :

``ஜன கல்யாண் மூலம் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டார்'' - ஸ்ரீஜெயேந்திரர் குறித்து ஹரிஹர முத்தையர்

post image

"அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்" என்று அவரின் ஜெயந்தி விழாவில் ஹரிஹர முத்தையர் நெகிழ்ச்சியோடு பேசினார்.

காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி

முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 91-ஆவது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள மகா பெரியவா கோயிலில் ஜெயந்தி விழா நடைபெற்றது.

இந்த ஜெயந்தி நிகழ்வில், மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.

ஜெயந்திரரின் படத்துகக்கு மாலை அணிவித்து வணங்கி மரியாதை செய்த தமிழ்நாடு பிராமண சேவா சமாஜத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தையர் பேசும்போது, "அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். ஜன கல்யாண் என்கிற அமைப்பை நிறுவி பல்வேறு பிரிவைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்காக பாடுபட்டவர். அதிலும் குறிப்பாக மிகவும் அடித்தட்டில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

ஜெயந்திரர் ஜெயந்தி

இன்று அயோத்தியில் நாம் ஸ்ரீ ராமரை வழிபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் அதற்காக அன்றே உழைத்தவர், அவர் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்றுவதுதான் நாம் அவரது ஜெயந்தி நாளில் அவருக்கு செய்யும் மரியாதை ஆகும்" என்றார்.

நெருங்கும் விநாயகர் சதுர்த்தி விழா: ஈரோடு மாவட்டத்தில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்!

ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள்ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள்ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள்ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள்ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயக... மேலும் பார்க்க

பிரம்மஹத்தி பரிகார ஹோமத்தில் கலந்து கொண்டால் கிடைக்கும் 7 அற்புத பலன்கள்..!

2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. சகல கஷ்டங்களையும் நீக்கும் இந்த அபிவிருத்தி ஹோமத்தில் கலந்து... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: `கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் மக்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த ஆண்டாள் தேர்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது... மேலும் பார்க்க

நீலகிரி: `விவசாயம் செழிச்சு, பருவம் தவறா மழை பெய்யணும் ஹெத்தையம்மா...' - களைகட்டிய அறுவடை திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஹெத்தையம்மன் எனும் மூதாதையரை குலதெய்வமாக போற்றி வணங்கி வரும் இந்த மக்கள், விதைப்பில் தொடங்கி அறுவடை வரை... மேலும் பார்க்க

காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு திருப்பதியில் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி!

காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு மதுரை மக்கள் சார்பில், திருப்பதியில் பிக் ஷா வந்தனம் என்ற நிகழ்ச்சி வருகிற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதுகுறித்து மதுரை பிக் ஷா வந்தன கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க