தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா? சென்னை மாநகராட்சி விளக்கம்!
சிவகாசி: பட்டாசு உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை உரிமையாளர்களின், வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் ஆகியவை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 7 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசியிலிருந்து வருடம் தோறும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகம் நடந்து வருகிறது. இங்கிருந்து பட்டாசுகள் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மூலமாக நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனையாகிறது.

இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வரி எய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறை மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருமான வரித்துறை உயரதிகாரிகளும், அலுவலர்களும் சிவகாசியில் முகாமிட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் வருமான வரி துறையினரின் இந்த சோதனை, இரண்டு நாட்களுக்கு நடைபெறலாமென்றும் வருமான வரி துறை வட்டாரத்தினரிடையே கூறப்படுகிறது.