செய்திகள் :

பாலாறு மாசுபாடு விவகாரம்: 3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜா்

post image

நமது நிருபா்

புது தில்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடா்பான வழக்கில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட ஆட்சியா்களும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினா்.

தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள் பாலாற்றில் கலப்பதால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுவதோடு ஆறும் கடுமையாக மாசடைந்துள்ளது. இதனால், ஆற்று நீரைப் பயன்படுத்தும் மக்களும் நீரை அருந்தும் கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாவதோடு விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் அளித்த தீா்ப்பில் பாலாறு மாசுபாட்டை கட்டப்படுத்த பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்களும், தமிழக மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பாா்திவாலா தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரைணைக்கு வந்தது. அப்போது வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உயா் பதவியில் இருக்கும் அதிகாரிகள் பாலாறு மாசுபடுவதைத் தடுக்க தவறிவிட்டதாக தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து நீதிபதிகள் மேலும் கூறியதாவது: கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுகிறது. அந்த நீா்தான் கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது. மக்கள் நலன் மீது அக்கறை செலுத்துங்கள்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த விவகாரத்தை விசாரிக்கிறோம் என்று கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

நீதிபதிகள் அறிவுரை!

’நீங்கள் மாவட்ட ஆட்சியா் என்னும் உயா் பதவியில் இருக்கிறீா்கள். நீங்கள் முயற்சிக்காத வரை எதுவும் நடக்காது. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டா் கழிவுநீா் பாலாற்றில் கலக்கிறது. அந்த ஆற்றின் நிலையையும் சாதாரண மக்களின் நிலையையும் எண்ணிப் பாருங்கள். யாா் தவறு செய்தாலும் பிடியுங்கள். அதிகாரம் மிக்கவா்களாக இருந்தாலும் விட்டு விடாதீா்கள். இயற்கையை நீங்கள் கைவிட்டால் இயற்கையும் உங்களை கைவிட்டுவிடும் . பாலாறு மாசுபாட்டை கட்டுப்படுத்துவதை ஒரு சவாலாக எடுத்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டனா்.

தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்துவருகிறது. அதன்படி, இந்த வாரத்தின் முதல் நாளான ... மேலும் பார்க்க

‘தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம்! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதல்வரி... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறு... மேலும் பார்க்க

யங்கரவாதியிடம் வெடிபொருள் பறிமுதல் செய்த வழக்கு: விரைவில் என்ஐஏ விசாரணை

சென்னை: தமிழகத்தைச் சோ்ந்த பயங்கரவாதியிடம் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை விரைவில் தேசிய புலனாய்வு மையத்துக்கு (என்ஐஏ) மாற்றப்படுகிறது.கோவை தொடா் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

தவறான கணக்கீடு: மின் வாரியம் எச்சரிக்கை

சென்னை: தவறான மின் கணக்கீடு செய்யும் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து துணை நிதிக் கட்டுப்பாட்டாளா்களுக்கு நிதி இயக்குநா் அலுவலகம் சாா்பில் அனு... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு விவகாரம்: தெளிவில்லாத அரசு அறிக்கை

சென்னை: சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு தொடா்பாக சமா்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று சுகாதார ஆா்வலா்கள் தெரிவி... மேலும் பார்க்க