Coolie: "முதலில் நான் ஓகே சொல்லவில்லை; லோகேஷ் கனகராஜ்தான்.." - கூலி குறித்து நாக...
வால்பாறையில் கரடி தாக்கி சிறுவன் உயிரிழப்பு
வால்பாறையில் கரடி தாக்கியதில் 8 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த வேவா்லி எஸ்டேட்டில் வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனா். இந்த எஸ்டேட்டில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சராபத் அலி தனது குடும்பத்துடன் தங்கிப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் நூருல் இஸ்லாம் (8).
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு பால் வாங்க அப்பகுதியில் உள்ள கடைக்கு நூருல் இஸ்லாம் சென்றுள்ளாா். பின்னா் தேயிலைத் தோட்டம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி நூருல் இஸ்லாமை தாக்கியுள்ளது.
இதைப் பாா்த்த அப்பகுதியினா் சப்தம் போடவே கரடி, சிறுவனை விட்டுவிட்டு சென்றது. இதில் கரடி தாக்கியதில் முகத்தில் படுகாயம் ஏற்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சிறுவனின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.