செய்திகள் :

``தனுஷ் நல்ல நண்பர்'' - டேட்டிங் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணால் தாக்கூர்

post image

பாலிவுட் நடிகை மிருணால் தாக்கூர் நடிகர் தனுஷுடன் டேட்டிங்கில் இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் பரவிக்கொண்டிருந்தது.

அடிக்கடி தனுஷ் மும்பை வந்து மிருணால் தாக்குருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாகவும், இருவரும் காதலிப்பதாகவும், டேட்டிங் செல்வதாகவும் வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

தனுஷ் சகோதரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் மிருணால் தாக்கூர் பாலோ செய்தார். மிருணால் தாக்குர் நடித்த சன் ஆப் சர்தார் பட அறிமுக விழாவிலும், மிருணால் தாக்கூரின் பிறந்தநாள் விழாவிலும் தனுஷ் நேரில் வந்து கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

மிருணால்

இது தொடர்பான செய்திக்கு தனுஷ் தரப்பில் எந்த வித விளக்கமும் கொடுக்கப்படாத நிலையில், மிருணால் தாக்கூர் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,''தனுஷ் எனக்கு நல்ல நண்பர். சன் ஆப் சர்தார் 2 பட நிகழ்ச்சிக்கு நான் அழைத்து தனுஷ் வரவில்லை. அஜய்தேவ்கன் அழைத்துதான் அவர் வந்திருந்தார். இதை யாரும் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மிருணால் தாக்கூர் தென்னிந்திய படங்களில் நடித்தபோது அவருக்கு தனுஷுடன் நெருக்கம் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்து வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் சமரசம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

``3 மாதங்களில் புதிய சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்'' - கேரள அமைச்சர் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் சினிமா படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சின... மேலும் பார்க்க

``அதுவும் ஒரு அனுபவம்'' - லலித் மோடியுடன் காதல் உறவு குறித்து மனம் திறந்த நடிகை சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் எத்தனையோ பேருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஒரு சில உறவுகளை மட்டும் சுஷ்மிதா சென் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுண்டு. அந்த வகையில், ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடியுடன் சுஷ்மி... மேலும் பார்க்க

Pooja Hegde: "கிள்ளிப் பார்த்துக்கட்டுமா?" - பூஜா ஹெக்டேவுடன் அரட்டை அடித்த கமலேஷ்

சிம்ரனுடன் 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடி அவருக்கே டஃப் கொடுத்த கமலேஷ் தற்போது பூஜா ஹெக்டேவுடன் அரட்டை, டான்ஸ் எனக் கலக்கியிருக்கிறார்.கமலேஷிடம் பேசினோம்.'''பீஸ்ட்' படம் பார்த்ததுல ... மேலும் பார்க்க

`விஜய்'ணா இல்லாமல் LCU இல்லை!’ - லோகேஷ் கனகராஜ் கொடுத்த LCU அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கூலி. அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.லோ... மேலும் பார்க்க

அன்புமணிக்கு மாம்பழம்,1250 அழைப்பிதழ், சொந்த ஊருக்குத் தனி பஸ்; மகள் திருமணத்தை விவரிக்கும் கிங்காங்

கடந்த வாரம் சமூக வலைத்தளங்களை ரொம்பவே ஆக்கிரமித்திருந்த ஒரு செய்தி நடிகர் கிங்காங் மகள் திருமணம். நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்து கொண்ட அந்தத் திருமணத்தின... மேலும் பார்க்க

``ஸ்டண்ட் மாஸ்டர் நம்மோடு இல்லை என்பதை ஏற்க முடியவில்லை” - கலங்கிய பா.ரஞ்சித், சோகத்தில் படக்குழு..

இயக்குநர் பா.ரஞ்சித் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிப்பில் `வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. பிரபல ரெளடி ‘மண... மேலும் பார்க்க