"இந்தியா மீதான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கலக்கம்" - ரஷ்யா குறித்து ட்ரம்ப்!
மதிய நேர முக்கிய தொடர் 479 எபிசோடுகளுடன் நிறைவு!
மதிய நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களின் முக்கிய தொடரான தங்கமகள் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இந்தத் தொடரின் பிரதான பாத்திரங்களில் யுவன், அஸ்வினி, காயத்ரி ஜெயராம், அஜய் ரத்னம், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.
ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட அஸ்வினி, எளிமையான குடும்பத்துக்கு பணிப்பெண்ணாக சென்று நாயகனை(யுவன்) காதலிக்கிறார்.
இவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கமகள் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டு விறுவிறுப்புக் காட்சிகளுடன் நிறைவடைந்தது.
தங்கமகள் தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், 479 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது.
மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களில் ஒன்றான தங்கமகள் தொடர் நிறைவடைந்துள்ளது, இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிற்பகல் 3 .30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தங்கமகள் தொடர் நிறைவடைந்ததால், இந்த நேரத்தில் தனம் என்ற தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இதையும் படிக்க: கூலிக்காக போலி விடுப்பு வேண்டாம்.. டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த நிறுவனம்!