செப்.8ல் பிரதமர் மோடி அஸ்ஸாம் வருகை: ஏற்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர்!
பிரதமர் நரேந்திர மோடி மாநில வருகைக்கான ஏற்பாடுகளை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று ஆய்வு மேற்கொண்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலில்,
செப்டம்பர் 8 ஆம் தேதி கோலாகாட் மாவட்டத்திற்கு மோடியின் வருகைக்காக டெர்கானில் உள்ள அஸ்ஸாம் போலீஸ் மாநாட்டு மையத்தில் ஏற்பாடுகளை சர்மா ஆய்வு செய்தார்.
பிரதமர் மோடி நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்துவைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார். ஏற்பாடுகள் அனைத்து முடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேளாண் அமைச்சர் அதுல் போரா, நிதி அமைச்சர் அஜந்தா நியோக், போக்குவரத்து அமைச்சர் ஜோகன் மோகன், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் பிஜுஷ் ஹசாரிகா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேஷப் மஹந்தா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரூபேஷ் கோவாலா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தலைமைச் செயலாளர் ரவி கோட்டா, டிஜிபி ஹர்மீத் சிங் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த மறு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.