சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த சிறுமி படுகாயம்!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சிறுமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் படுகாயமடைந்தார்.
ஆள்கொணர்வு வழக்கில் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை 15 வயது சிறுமி ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணையில் சிறுமியை காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் அதிருப்தி அடைந்த சிறுமி, நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.