செய்திகள் :

ரஷியாவின் ஒரே ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்!

post image

ரஷியாவின் ஒற்றை ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் ஒரென்பர்க் பகுதியிலுள்ள, அந்நாட்டின் ஒற்றை ஹீலியம் உற்பத்தி ஆலையின் மீது, நேற்று (ஆக.11) உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹீலியம் ஆலையைச் சுற்றியிலும், ஏராளமான ட்ரோன்கள் பறந்ததை அங்கு வசிக்கும் மக்கள் நேரில் பார்த்ததாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதியில் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரஷியாவின் விமானப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களில், உக்ரைனின் 36 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

ராக்கெட், விண்வெளி மற்றும் விமான தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஹீலியம் வாயு போர் தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் ராணுவத் தளவாடங்களின் உற்பத்திக்கும் மிகவும் அவசியமான ஒன்றெனக் கூறப்படுகிறது.

இத்துடன், ரஷிய பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவரைக் குறிவைத்து உக்ரைன் நடத்த முயன்ற பயங்கரவாதத் தாக்குதலை, அந்நாட்டு அதிகாரிகள் தகர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, ரஷியா மற்றும் உக்ரைனின் குடியுரிமைப் பெற்ற நபர் ஒருவர், வீட்டிலேயே தயாரித்த சுமார் 60 கிலோ அளவிலான வெடிகுண்டை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 50% வரி.. இந்தியாவை கிண்டலடிப்பதா? கொந்தளித்த இலங்கை எம்.பி.

Ukraine has reportedly attacked Russia's only helium plant with drones.

இஸ்ரேலுடனான போரின்போது 21,000 பேர் கைது: ஈரான் அரசு அறிவிப்பு!

இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த ஜூன் ... மேலும் பார்க்க

50% வரி.. இந்தியாவை கிண்டலடிப்பதா? கொந்தளித்த இலங்கை எம்.பி.

அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரி விதித்திருப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேச்சு எழுந்தபோது, இந்தியாவை கிண்டலடிப்பதா, நம்முடைய மோசமான நேரத்தில் உதவியதே இந்தியாதான் என எம்.பி. டி சி... மேலும் பார்க்க

டிரம்ப் வரியால்.. அமெரிக்கர்களுக்கு கானல் நீராகுமா காபி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளுடனான வர்த்தகத்துக்கு விதித்து வரும் புதிய வரி விதிப்பு முறையால், வரி விதிப்பை சந்திக்கும் நாடுகளோடு சேர்த்து, அமெரிக்கர்களும்தான் பாதிக்கப்படுவார்கள்.இந்த ... மேலும் பார்க்க

ரஷியாவின் மிக பயங்கர டெட் ஹேண்ட்! மெத்வதேவ் எச்சரித்த அணு ஆயுத அமைப்பு உண்மையா?

ரஷியாவுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதிலடியாக, டெட் ஹேண்ட் எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதத் தாக்கும் அமைப்பு பற்றி முன்னாள் ரஷிய அதிபர் டிமிட்ர... மேலும் பார்க்க

பலூச் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல.. பாகிஸ்தானால் பாதிக்கப்பட்டவர்கள்: மனித உரிமை அர்வலர்கள்!

பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் மஜீத் படைப்பிரிவை பயங்கரவாதக் குழுக்களாக அமெரிக்க அறிவித்துள்ளதற்கு, அந்நாட்டின் மூத்த மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தள... மேலும் பார்க்க

சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்

சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்த... மேலும் பார்க்க