தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முதல் கியூப ஒருமைப்பாட்டு விழா வரை - 12.08.2025 ம...
கேமரா பிரியர்களுக்காக... விவோ வி 60 அறிமுகம்!
விவோ வி60 என்ற புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போனில் கேமராவை அதிகம் விரும்புபவர்களுக்கான விருப்பத் தேர்வாக விவோ வி60 இருக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது விவோ வி 60 அறிமுகமாகியுள்ளது.
நினைவகத்தின் அடிப்படையில் 4 வகைகளில் விவோ வி 60 கிடைக்கிறது. விலையும் நினைவகத்தின் திறனுக்கேற்ப மாறுபடுகிறது.
8GB உள் நினைவகம் 128GB நினைவகம் உடையது ரூ. 36,999.
8GB உள் நினைவகம் 256GB நினைவகம் கொண்டது ரூ. 38,999
12GB உள் நினைவகம் 256GB நினைவகம் கொண்டது ரூ. Rs 40,999
16GB உள் நினைவகம் 512GB நினைவகம் கொண்டது Rs 45,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வங்கி கடன் அட்டைகளுக்கு 10% வரை தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இணைய தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
விவோ வி60 ஸ்மார்ட்போனானது சாம்பல், நீலம், தங்க நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன.
6.67 அங்குல அமோலிட் திரை கொண்டது. பயன்படுத்துவதற்கு திரை சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் உடையது.
பொதுவெளியிலும் திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 5000nits திறன் கொண்டது.
குவால்கம் ஸ்நாப்டிராகன் 7 ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது.
மூன்று கேமராக்கள் உள்ளன. பின்புறம் 50MP முதன்மை கேமரா வழங்கப்பட்டுள்ளது. 50MP டெலிபோட்டோ சென்ஸார் உடையது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்புறமும் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
6500mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 90W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
நீர் புகாத்தன்மைக்காக IP68 திறனும் தூசு படியாதன்மைக்காக IP69 திறன் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அமேசானில் ரூ. 32,780-க்கு ஐபோன் 15 வாங்கலாம்! ரூ. 47,120 தள்ளுபடி பெறுவது எப்படி?