ஆயில் இந்தியா லாபம் 1.4% ஆக உயர்வு!
புது தில்லி: எண்ணெய் விலை சரிந்ததால், ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாப வளர்ச்சி கிட்டத்தட்ட நிலையாக இருந்ததாக அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா லிமிடெட் இன்று தெரிவித்தது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதத்தில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,046.51 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.2,016.30 கோடியாக இருந்தது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் ஆயில் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 1.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,046.51 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.2,016.30 கோடியாக இருந்தது என்றது நிறுவனம்.
கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த ஆண்டு ரூ.1,466.84 கோடியாக இருந்த நிகர லாபம் ரூ.813.48 கோடியாகக் குறைந்தது. 2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பீப்பாய்க்கு 84.89 அமெரிக்க டாலரிலிருந்து 2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பீப்பாய்க்கு 66.20 டாலராகக் குறைந்தது. இது 22 சதவிகிதம் குறைவு.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதத்தில் 1.680 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்தது எண்ணெய் நிறுவனம். இதுவே கடந்த ஆண்டு 1.689 மில்லியன் டன்னாக இருந்தது.
ஆயில் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனமான நுமலிகர் சுத்திகரிப்பு நிறுவனம் அதன் கச்சா உற்பத்தியை கடந்த ஆண்டு 7,64,000 டன்களிலிருந்து, முதலாவது காலாண்டில் 7,99,000 டன்களாகத் தக்க வைத்துக் கொண்டது.
இதையும் படிக்க: பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்