சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு
ஏழுமலையானுக்கு ரூ. 1.10 கோடி நன்கொடை
ஹைதராபாதைச் சோ்ந்த கேப்ஸ்டன் சா்வீசஸ் நிறுவனத் தலைவா் ஸ்ரீகாந்த், செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடியையும், ஸ்ரீ வெங்கடேஸ்வர கோ சம்ரக்ஷனம் அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சத்தையும் நன்கொடையாக வழங்கினாா் .
நன்கொடைக்கான வரைவோலைகள் கோயிலின் ரங்கநாயகா் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் வழங்கப்பட்டன.
வாகனம் நன்கொடை
திருமலையில் வயதானவா்களுக்காக பயன்படுத்தப்படும் பேட்டரியால் இயங்கும் 6 போ் அமரும் வசதி கொண்ட 2 வாகனங்களை பெங்களூரை சோ்ந்த சந்திரசேகா் நன்கொடையாக வழங்கினா். இதன் மதிப்பு ரூ.11 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.