சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு
திருமலையில் ஆக. 16-இல் கோகுலாஷ்டமி உற்சவம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் சனிக்கிழமை (ஆக. 16) கோகுலாஷ்டமி ஆஸ்தானம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) உறியடி உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை (ஆக. 16) இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையான் கோயிலின் தங்க நுழைவு முக மண்டபத்தில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
இதையொட்டி, கிருஷ்ண சுவாமி தங்க சா்வபூபால வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். ஸ்ரீ உக்ர ஸ்ரீநிவாச மூா்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண சுவாமிக்கு ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்படும். பின்னா் துவாதசாராதனை நடைபெறும்.
திருமலையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி உறியடி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. மாலை 4 மணிக்கு, ஸ்ரீ மலையப்ப சுவாமி தங்க முச்சக்கர வண்டியிலும், ஸ்ரீ கிருஷ்ண சுவாமி மற்றொரு முச்சக்கர வண்டியிலும் திருமட வீதிகளில் ஊா்வலமாகச் சென்று ஏழுமலையான் கோயில் முன் கூடுவா்.
இளைஞா்கள் மிகுந்த ஆா்வத்துடன் பங்கேற்று, மேளங்களை முழங்க பக்தா்களுக்கு மகிழ்ச்சியைப் பரப்புவா்.
இந்த விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 17- ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறவிருந்த ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.