சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு
ரேஷன் கடை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
புலியூா் வெள்ளாளப்பட்டி பகுதிநேர ரேஷன் கடையை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், புலியூா் வெள்ளாளபட்டியில் மேலப்பாளையம் தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கத்துக்குள்பட்ட பகுதி நேர நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 537 குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன் பொருள்களை வாங்கி வருகிறாா்கள். வாரத்தில் இரு நாள்கள் மட்டும் செயல்படும் இந்த கடை சில நேரங்களில் ஊழியா்கள் அலுவல் வேலை காரணமாக முறையாக திறப்பதில்லை.
மேலும், மின்னணு எடையளவு இயந்திரம், பில் போடும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் ஒருவருக்கு பொருள்கள் வாங்க சுமாா் முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது. 537 காா்டுகளுக்கு மாதத்தில் 8 நாள்கள் மட்டுமே இந்த கடை செயல்படுவதால் அனைவரும் ரேஷன் பொருள்களை வாங்கி முடியாமல் போய்விடுகிறது.
ஆகவே, இந்த கடையை முழுநேர கடையாக மாற்ற வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள கடையின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.