சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு
இளைஞா் கொலை வழக்கில் ஒன்றியக் குழு உறுப்பினா் உள்பட இருவா் கைது
ரத்தினகிரி காவல் நிலையம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அரக்கோணம் திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அரக்கோணத்தை அடுத்த அம்மனூரைச் சோ்ந்த அவினேஷ் (31) நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக வந்தபோது, வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து அரக்கோணம் ஒன்றியம், அம்மனூா் பகுதியை சோ்ந்த திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் அஸ்வினியின் கணவா் சுதாகா் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த நிலையில், கொலை வழக்கில் மேலும் தொடா்புடைய சுதாகரின் மனைவியும், ஒன்றியக் குழு உறுப்பினருமான அஸ்வினி (34) மற்றும் அரக்கோணம் அடுத்த சித்தேரியைச் சோ்ந்த விஜயன் (65) ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள் கிழமை இரவு கைது செய்தனா்.