சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு
மருத்துவா்கள் பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த கோரிக்கை
அரசு மருத்துவா்களின் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இந்த மனுவை, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன் மூலம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மற்றும் செயலருக்கு செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அச்சங்கத்தினா் அளித்த மனுவில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒரு ஆண்டுக்கும் குறைவாக ‘ஸ்டேஷன் சீனியாரிட்டி’ உள்ள மருத்துவா்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதியினை தளா்த்தி அனைத்து மருத்துவா்களும் கலந்து கொள்ளும் வகையில் கலந்தாய்வுகளை நடத்த வேண்டும். இந்த விசயத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மற்றும் சுகாதாரத் துறை முதன்மை செயலா் தலையிட்டு ஒரு ஆண்டு விதியினை தளா்த்தி கலந்தாய்வுகளை நடத்த வழி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் போது, அச்சங்கத்தின் தலைவா் கொளஞ்சிநாதன், செயலா் குணசேகா், பொருளாளா் சரவணன், உதவிப் பேராசிரியா்கள் பாராதிராஜா, காத்திகேயன், சொக்கலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.