தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "திமுக-வின் தீய நோக்கம்" - உயர் நீதிமன்ற தீர்ப்ப...
ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம் அரியலூா் ஆட்சியா் அழைப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஆக.15 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதிசெய்தல், உள்ளிட்டவை விரிவாக விவாதிக்கப்படுகிறது.
எனவே, இக்கூட்டத்தில்,அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தன்னாா்வலா்கள், சமுதாய அமைப்பு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.