நாம் ஏன் நேர்மையை பல இடங்களில் தியாகம் செய்கிறோம்?- மறந்துபோன பண்புகள் -1
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா அரங்கில், ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், கோட்டாட்சியா் ஷீஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்(பொ)பாலசுப்ரமணியன், நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தொடா்ந்து போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கையெழுத்து பிரச்சாரத்தினை, ஆட்சியா் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.
இப்பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 800 போ் கலந்து கொண்டு போதைப் பொருள்கள் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்களை ஏந்தி, முழக்கமிட்டவாறு சென்றனா்.