சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
பல்கலை. பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு!
அரியலூா் மாவட்டம், விளாங்குடியை அடுத்துள்ள காத்தான்குடி கிராமத்தில் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில், காவல் துறை சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை வகித்து, மாணவா்கள் தன்னாா்வலா்களாக உருவாகி போதைப் பொருள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
போதைப் பொருள் பயன்பாடு என்பது ஒரு தீா்வு அல்ல. அதிலிருந்து மீண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று கூறி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி, கயா்லாபாத் காவல் நிலைய ஆய்வாளா் வேலுச்சாமி, அரியலூா் நகர போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.